திருச்சிற்றம்பலம்
தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை அ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம். இ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம். பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக் குரை: த் ஏழாவது மெய்; ம் பத்தாவதாகும்; ழ் 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம். ஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் - சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் - கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:- த் - அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ - அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று. ம் - இ:- சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம். இ - பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும். ழ்:- இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம். உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:- மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க. இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம். திருச்சிற்றம்பலம்
| tirucciṟṟampalam
tamiḻ eṉpatu t-a-m-i-ḻ eṉṉum aintu alaku nilaiyuṭaittu. t, m, ḻ: jaṭacit kalai. a, i: citkalai a akaṇṭākāra cittai viḷakkum ōṅkāra pañcākkarattuḷ patinilai akkaramām. i patiyai viṭṭu nīṅkāta cittai viḷakkum viyavakārattāl aṉantākāra viyaṣṭi pētaṅ kāṭṭum jīvacitkalai akkaramām. pati citātma kalaikaḷuk kātāramāki uyiriṉukkuṭalaiyottuk kuṟikkappaṭum t, m, ḻ eḻuttukkaḷuk kurai: t ēḻāvatu mey; m pattāvatākum; ḻ 15-vatu iyaṟkai uṇmaic ciṟappiyal akkaramām. ain talakunilaiyum upaya kalainilaiyum mūṉṟu meynilaiyum amaintuḷḷatum, campupakṣattārāl aṉātiyāy - cutta cittānta āriṣa rītippaṭi kaṭavuḷ aruḷāṇaiyāl - kaṟpikkappaṭṭatum, eppāṣaikaḷukkum piturpāṣai yeṉṟu āṉṟōrkaḷāl koṇṭāṭappaṭṭatum, iṉimai eṉṟu niruttam cittikkap peṟṟuḷḷatumāṉa tamiḻ eṉṉum iyaṟkai uṇmaic ciṟappiyal moḻikkuc cutta cittānta pata'urai:- t - a:- tatvarūpāti civapōkāntamāṉa tacakāriya iyaṟkai uṇmaik kaṭṭaḷai nilaiyil, muṉ alaku nilaipporuḷ kūṟiyaviṭattuk kuṟitta ēḻāvatu nilaiyākiya t eṉpatu civarūpa iyaṟkaiyuṇmaik kaṭṭaḷaiyām. a - akaṇṭākāra citkalā rūpa ōṅkārat tuṭporuṭ piratama vilakkiya viyakti akkaram. paṉṉīruyir nilaiyiṟṟalaiyāya mutalakkara mātalil, atuvē piramāti paracivānta navanilaikkum aṉātiyāti kāraṇamāyuḷḷa iyaṟkaiyuṇmaip paripūraṇap poruḷilakkām. eṉṉavē, civarūpamākum takarākācattil cutta civamākum aruṭjōtiyiṇaintuḷḷa pūraṇāṉanta svarūpa parapati viyaktamāyiṟṟu. m - i:- caṅkāra praṇavamākiya makāram muktāṉmākkaḷukku oḷivaṇṇac catāṉantamāyum pettāṉmākkaḷukku iruḷ vaṇṇamalarūpamāyum iruntu kaṟpāntap piraḷaya muṭiviṉ ciruṣṭi titiyātikaḷil citāṉma caktiyākiya jīvaṉukku atikaraṇamākavum, muṟkuṟitta pattāvatu nilayamākiya āṉmātāramākiyum uḷḷateṉap poruḷām. i - paṉṉīruyirnilaikaḷil mūṉṟām nilai uyirākiya ikāram tirikalā āṉmavarukkattil aparamākiya cakalākalaraiyum paramākiya piraḷayākalaraiyum kīḻppaṭutti avviru kūṭṭattārukkum mēṟpaṭṭu niṉṟa cutta viññāṉakalarākiya citātmākkaḷaic cuṭṭukiṉṟatām. eṉṉavē, ātāra ātēyak kūṭṭuṟavāl eṉṟun tōṉṟi viḷaṅkum citāṉma varukkaṅkaḷ parapati lakṣiyamākiya pūraṇāṉantattiṟku aṉupavikaḷāka uriyavarkaḷeṉak kuṟikkoḷḷal vēṇṭum. ḻ:- intac ciṟappiyal akkaram patiṉeṇ meykaḷil pakṣamuṭipiṉ eṇ kuṟippil niṉṟu, civayōka pūmiyākiya paratakaṇṭattil paurāṇika tattuvattāṟ kuṟikkappaṭṭa aimpattāṟu tēcaṅkaḷuḷ cutēcantavira maṟṟa aimpattaintu tēca pāṣaikaḷilum illātatāyum, patiṉeṇṇilamākak kuṟikkappaṭṭa centamiḻ koṭuntamiḻ eṉṉum irumaikkum oṟṟumai yurimaiyāyum, muttuṟait tamiḻukkuḷ mutaṉmait tuṟaiyāṉatum irukku yajur cāmam eṉṉum camaskiruta vētāttirayap poruḷ aṉupavattai eḷitil kaṟṟuṇarntu teḷintu aṉupavittataṟkup paramēcuraṉatu tiruvaruḷaip pañcākṣara muttoḻiṟ kāriyamāṉa pañcatacākkariyāl pirattiyakṣāṉupavam cittikkac ceyyum nilayamāṉatum, srīmāṇikkavācakar, campantar, nāvaraiyar, cuntarar, tirumūlar mutaliya makāpuruṣarkaḷāl cāttira tōttiraṅkaḷāka aruḷicceyyappaṭ ṭirukkum tiruvācakam, tēvāram, tirumantiram eṉṉum paramārtta rakaciyaṅkaḷai uṭaiyatum, palanāḷ naiṣṭika atikaraṇam pūṇṭu pōtakāciriyar cannitiyil tāḻntu cakapāṭikaḷōṭu cūḻntu cura olipētaṅkaḷait tērntu uḻaippeṭuttu ōtiṉālum pāṭamāvataṟku arumaiyāyum, pāṭamāṉālum pāṣa’yam, viyākkiyāṉam, ṭīkkā, ṭūkkā, ṭippaṇi mutaliya uraikōḷ karuvikaḷaip poruḷ koḷḷat tēṭa vēṇṭiyatāyum, avvavaikaḷaiyum tēṭik kaivariṉum akkaruvikaḷāl pōtakam peṟavēṇṭiyataṟkup pāṣa’yakārarkaḷ viyākkiyāṉakarttarkaḷ ṭīkkāvallaparkaḷ ṭūkkācūcakarkaḷ mutaliya pōtaka upapōtaka ācāriyarkaḷ kiṭṭuvatu arumaiyil arumaiyāyum irukkiṟa āriyam makārāṭṭiram āntiram eṉṟa paṟpala pāṣaikaḷaip pōlākāmal, perumpālum kaṟpataṟku eṇṇaḷavu curukkamāyum, oli ilēcāyum, kūṭṭeṉṉuñ canti aticulapamāyum, eḻutavum kaviceyyavum mika nērmaiyāyum, akṣara āravāram collāṭamparam mutaliya peṇmai alaṅkāra miṉṟi eppāṣaiyiṉ cantacukaḷaiyum taṉ pāṣaiyuḷ aṭakki āḷukaiyāl āṇṭaṉmaiyaip poruntiyatumāṉa taṟpāṣaikkē amaivuṟṟa ḻ, ṟ, ṉ eṉṉum muṭinaṭu aṭi ciṟappiyal akkaraṅkaḷil muṭinilai iṉpāṉupava cutta mōṉā tītattaic cuṭṭaṟac cuṭṭum iyaṟkai uṇmait taṉittalaimaip perumaic ciṟappiyal oliyām. urai kūṟippōnta cuttacittānta āriṭarīti muppatavuraip poḻippu:- maruḷiyaṟkai mala'iruḷaip paripākacattiyāl aruḷoḷiyākki, ataṟkuḷḷīṭāṉa citātma ciṟkalācatti eṉṉum cutta āṉmāvāṉatu, takara, kakaṉa, naṭaṉa aruṭperuñjōti eṉṉuñ cutta civāṉanta pūraṇattai cutta mōṉātīta viyalāl aṉupavikkum iyaṟkai uṇmaiyē tamiḻ eṉṉum coṟporuḷ cuṭṭiṉavāṟu kāṇka. itaṉ karuttu yāteṉil:- tamiḻppāṣaiyē aticulapamākac cuttacivāṉupūtiyaik koṭukku meṉpatām. tirucciṟṟampalam
| Sacred Gnosis Revealed! Tamil is Th – A – M -– E – Zh formed of 5 units of measure. Th, Im, Zh represents Art of Physical Consciousness (Jada Chit Kalai). A, E – Art of Consciousness Proper (Chit Kalai). A - Represents the One Divine or First Primordial God, first syllable of AUM- SiVaYaNaMa that expresses the Cosmic Consciousness E - Represents the Soul Consciousness syllable, expresses the Consciousness always inseparable from the Divine and showing up as the One becoming the Infinitely Many manifested differences. The explanation of [Th,Im,Zh] representing the Physical Body for the Soul where the Divine becoming basis of all Soul Consciousness arts is as follows Th – 7th consonant M - 10th consonant, Zh – 15th Natural Truth Specialty Syllable The language, that was taught by Sambu (Being who is the Cause of Universe) from beginning less time,- according to Pure Siddhantha was taught by Divine Grace and Command - , that was celebrated as the Father of all languages by wise men, and stand completed meaning ‘sweetness’ , Natural Truth Specialty Language Thami zh’s Pure Siddhantic Explanation as follows In the 10 commandments to Natural Truth Experience, with the Tattwas Form (Tatwaa Roopa) as the beginning, becoming One with the Supramental Divine as the end, the before mentioned ‘Th’ in 7th position represents the Supramental Form Natural Truth Command. The ‘A’ Akaram expressing the Cosmic Consciousness Form AUM’s inner meaning is the manifestation syllable. As Akaram is the first syllable of the 12 soul syllables (vowels) and represents the Primordial God or Supramental Divine, that Is, the Natural Truth’s Evolutionary Perfection Goal for the 9 states from Brahma to ParaSiva. So, the Supramental Divine Essence takes form in the Physical Ethereal Plane (Thakara akasa), gets involved and manifested in the Physical. The ‘M’ dissolution sound of ‘AUM’ Pranava (‘A’ –Creation, ‘U’ –Protection , ‘M’ – Dissolution) and turns out to be the Truth Delight (Sat + Ananda) for the Liberated Souls and Inconscient Darkness for Involved Souls and at the end of the Conception Pralaya at the birth and in Life it becomes Supramental and Soul’s Base (10 represents Physical Base) for the Jiva or Psychic Consciousness Force. The ‘E’ Ekaram being the 3rd alphabet denotes the third of the three Spiritual Beings, the Supramental Being who stand above the lower Human Beings and higher Overmental Beings. So, the Conscious Soul beings who always manifested and evolve based on the Divine Command. Physical Base relationshipshould be marked as rightful to experience the Supreme Aim of Integral Perfect Delight Standing in the last syllable position as 15th of the 18 consonants, in the “Sivayoga land of Bharat ham” uniquely found only in the Swadesh out of 56 lands mentioned in Pauranika Tattwa, being a commonright to Classical Tamil and Colloquial Tamil. Zh taking the 15th position represents the Divine Gracerevelation experience through PanchaDasakshra ( Panchakshra Triple works 5 x 3 = 15, NAMASIVAYA x AUM ) to easily learn and experience the essence of the First of the three Tamil Sangam classics “Rig,Yajur, Sama Sanskritic Vedas”. Tamil contains the Supreme Truth secrets of Devaram, Thiruvasagam and Thirumandiram Sastra-Stotras by MahaPurushas Sri Manickavasakar, Sambandhar, Navaraiyar,Sundarar, Thirumoolar. Unlike Sanskrit, Marathi, Telugu languages where even after being in completeconcentration and living in high consciousness collectively with other sadhaks and analyze and refine thedifferent sounds, it is very difficult to make lessons and get Bhasyam, Vyakhyanam, Tika Tippani tools (commentary, elaborate expositions and explanations of difficult words and phrases) and even if we get these, extremely difficult to get the teachers who teach with these tools, Tamil has low letter count,sounds light, conjunctive sandhi being very easy, very elegant to write and express poetically, without feminine decorations like pompous sounding aksharas or word decorations, and could absorb and govern any language’s structural features (chandasus). Unique to its language, among the special high,middle and low aksharas - zh,ir,in ‘zh’ the Natural Truth’s special sound denotes the highest state of Pure Supra- Monic Delight Experience. Sacred Gnosis Revealed!
-translation source "The Metaphysical Meaning of Tamil by Saint Ramalingam" by Rajesh Kothandaraman
|
No comments:
Post a Comment